search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் கைது"

    • முப்புடாதி மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார்.
    • தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பழனி ஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி முப்புடாதி (வயது 65).

    இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டதால் மகன் ராமருடன் வசித்து வந்தார். ராமருக்கு திருமணமாகியதால் அருகில் உள்ள ஆவுடையானூரில் மனைவியுடன் அவர் வசித்து வருகிறார். இதனால் மூதாட்டி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் முப்புடாதி அங்குள்ள மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், தென்காசி ஏ.டி.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அவர் ஆடை இன்றி நிர்வாண நிலையில் காணப்பட்டார். இதனால் அவர் பாலியல் துன்புறுத்தலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்த ராமர் (72) என்பவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    தொடர் விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ராமர் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ராமர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி, திருவண்ணா மலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் கடந்த 26, 27-ந் தேதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

    இதேபோல், திருவண்ணாமலை இரட்டை பிள்ளையார் கோவில் அருகே நரித்தோல் மற்றும் பற்களை வைத்து தாயத்து செய்து விற்பனை செய்யும் பணியில் நரிக்குறவர் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

    இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லா லுவுக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தாயத்து செய்து விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர், பெரம்பலூர் மாவட்டம் வெப்பம்தட்டு வட்டம் எறையூர் கிராமம் காமராஜர் பகுதியை சேர்ந்த டாம்கார் (வயது 56) என்பது தெரியவந்தது.

    மேலும் வனப்பகுதியில் வேட்டையாடப்பட்ட நரிகளின் தோல் மற்றும் பற்களை கொண்டு தாயத்து செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.

    இது குறித்து வனத்துறையினர் டாம்கார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்து ஒன்றாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
    • போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் நடத்தினர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ஒப்பாணக்கார வீதி, பெரிய கடை வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

    மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை பறித்து செல்லும் சூழ்நிலை உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை தெலுங்குபாளையம் பிரிவை சேர்ந்தவர் வினோத்(வயது30). சம்பவத்தன்று இவர் பஸ்ஸில் சென்றார்.

    ஒப்பணக்கார வீதி பிரகாசம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ்சில் பயணம் செய்த மர்மநபர் ஒருவர், இவர் வைத்திருந்த பணத்தை எடுத்து தப்பி சென்றார்.

    இதுகுறித்து அவர் பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    துணை கமிஷனர் சண்முகம் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வீரபாண்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, பாமா, ஏட்டுக்கள் கார்த்திக், பூபதி உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட புலியகுளத்தைச் சேர்ந்த அந்தோணி என்ற மண்டை அந்தோணி(59), கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன்(35), சிங்காநல்லூரை சேர்ந்த விவேகானந்தன் (55) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் அந்தோணி என்ற மண்டை அந்தோணி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    மேலும் இவர் தனது 17 வயதில் இருந்து தற்போது வரை 40 ஆண்டுகளாக தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரது கூட்டாளிகளான மணிகண்டன், விவேகானந்தன் ஆகியோர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இவர்கள் ஜெயிலில் நண்பர்கள் ஆனதும், பின்னர் 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்து ஒன்றாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் நடத்தினர்.

    • இரும்பு வாளியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே கல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, தொழிலாளி. இவரது மனைவி பார்வதி (வயது 44). அவரது வீட்டின் எதிரே வசிக்கும் பிச்சாண்டி (63) என்பவர் பார்வதியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை தட்டிக்கேட்ட ஏழுமலையை, பிச்சாண்டி அங்கிருந்த இரும்பு வாளியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் காயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பார்வதி சந்தவாசல்போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சாண்டியை கைது செய்தனர்.

    • நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனி யசாமி தலைமையிலான போலீசார் கிராமப்பகுதி களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது குமரப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் கள்ளச்சாரா யம் காய்ச்சி விற்பனை செய்தவரை கைது செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படு வதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனி யசாமி தலைமையிலான போலீசார் கிராமப்பகுதி களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குமரப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் கள்ளச்சாரா யம் காய்ச்சி விற்பனை செய்த ராஜேந்திரன் (55) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கள்ளச்சாராய ஊரல் 5 லிட்டர் மற்றும் மண் பானை, பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். ராஜேந்திரன் மட்டும் இதில் ஈடுபட்டாரா வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று இரவு பார்த்திபன் வழக்கம்போல் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
    • பார்த்திபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள கைலாசபட்டியை சேர்ந்தவர் பார்த்திபன். (வயது 27). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

    இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கருப்பையா (வயது 55). இவருக்கும் ஆட்டோ டிரைவரான பார்த்திபனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தினந்தோறும் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பார்த்திபன் பேசி வந்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் சமரசம் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு பார்த்திபன் வழக்கம்போல் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்போது கருப்பையா அதை தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    அதனை தொடர்ந்து கருப்பையா, அவரது மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய மூவரும் சேர்ந்து பார்த்திபனை அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் பார்த்திபன் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த பார்த்திபனின் தம்பியும் காயமடைந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் தென்கரை போலீசார் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்திபனை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பார்த்திபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே பார்த்திபன் இறந்த செய்தி அறிந்ததும் போலீசார் கருப்பையாவை தேடிவந்த நிலையில் அவர் தானாக முன்வந்து தென்கரை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கருப்பையாவின் மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய 2 பேரும் தலைமறைவாகினர். படுகாயம் அடைந்த பார்த்திபனின் தம்பி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பார்த்திபனின் மனைவி பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெண் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    சிகாகோ:

    அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்தார். திடீரென அவர் அந்த பெண்ணையும், அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கினார் . 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார். இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சரிந்தான்.

    இதைபார்த்த அந்த பெண் தனது மகனை காக்க முதியவருடன் போராடினார். அவரையும் முதியவர் கத்தியால் குத்தினார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார். ஆனாலும் அந்த முதியவர் அவரை விடவில்லை. கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் தனது கணவருக்கும் செல்போனில் தகவல் அனுப்பினார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்தான். மருத்துவ பரிசோதனையில் அவனது உடலில் கத்தி இருந்தது தெரியவந்தது. அந்த கத்தி வெளியே எடுக்கப்பட்டது. சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிறுவனை ஈவு இரக்கம் இல்லாமல் குத்திக்கொன்ற ஜோசப் சுபா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் நில உரிமையாளராக இருந்து வருகிறார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை முதியவர் குத்திக்கொன்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    • ஒரு முதியவர் சந்தேகத்துக்கிடமான நிலையில் இருந்தார்.
    • போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை நடத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு முதியவர் சந்தேகத்துக்கிடமான நிலையில் இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கடத்தூர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


    • ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகினர்.
    • 58 ஆண்டுக்கு பின்னர் கணபதி விட்டலை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கியை சேர்ந்தவர் மல்லிதராவ் குல்கர்னி. விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு சொந்தமான 2 எருமை மாடுகள், ஒரு கன்றுக்குட்டியை மர்மநபர்கள் திருடினர்.

    இதுதொடர்பாக பால்கி மகாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கிஷன் சந்தர், கணபதி விட்டல் வாக்மோர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்தது கடந்த 1965-ம் ஆண்டு. கைதான இருவருக்கும் அப்போது வயது 20. இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகினர்.

    இவர்களில் முதல் குற்றவாளியான கிஷன் சந்தர் 2006-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதுபற்றி அறிந்த மகாகர் போலீசார், 2-வது குற்றவாளியான கணபதி விட்டல் வாக்மோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவரை மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் அருகே தகலகான் கிராமத்தில் கைது செய்தனர். இப்போது கணபதி விட்டலுக்கு வயது 77 ஆகும். 58 ஆண்டுக்கு பின்னர் கணபதி விட்டலை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை தாக்கிய முதியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன்ப ட்டியை சேர்ந்தவர் ராணியம்மாள் (வயது60). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஜெய க்கொடி (73). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவ த்தன்று அத்துமீறி ராணி யம்மாள் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்தனர்.

    தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (34). இவர் அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அழகுராஜா என்பவர் இட்லி கேட்டு ஓட்டலுக்கு வந்துள்ளார். இட்லி தீர்ந்துபோய்விட்ட தாக கண்ணன் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அழகுராஜா அவரை சட்டையை பிடித்து இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கேரளாவுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
    • சமூக விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நடிகர் பாக்யராஜ் நடித்த ருத்ரா திரைப்படத்தில் வங்கியில் கொள்ளையடிப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் நடிகர் பாக்கியராஜ் வங்கியில் கொள்ளையடித்து விட்டு, அந்த பணத்தை பேக்கில் எடுத்து செல்லாமல், தான் அணிந்திருக்கும் சட்டைக்கு மேல் அணியும் கோட்டுக்குள் வைத்து கடத்தி செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

    சினிமாவில் தான் இப்படி கடத்த முடியும் என்று நினைத்த வேளையில், நிஜமாகவே இதுபோன்றே சட்டைக்குள் தனி பாக்கெட்டுகள் அமைத்து, பணத்தை கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    கோவை-கேரள எல்லையான வாளையாரில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கேரள கலால் துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பஸ் வந்தது. இந்த அரசு பஸ்சை கேரள கலால் துறை அதிகாரிகள் மறித்து, அதில் ஏறி அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் இருந்த முதியவர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் அணிந்திருந்த சட்டையும் வித்தியாசமாக காணப்பட்டது.

    இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த முதியவரை மட்டும் பஸ்சை விட்டு இறக்கி அருகே உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அங்கு வைத்து, அவரை முழுமையாக சோதனை செய்தனர். அவர் சாதாரண சட்டை, வேட்டி அணிருந்திருந்தார். ஆனால் அதற்குள் பாதுகாப்பு கவச உடை போன்று அணிந்திருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து அந்த நபரை சட்டையை கழற்ற சொல்லி, அந்த பாதுகாப்பு கவச உடையை பார்த்தனர். அப்போது, அதில் 20-க்கும் மேற்பட்ட தனித்தனி பாக்கெட்டுகள் இருந்தன.அந்த பாக்கெட்டுகளுக்குள் கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் பணம் இருந்தது.

    அதிர்ச்சியான அதிகாரிகள், வேறு எங்காவது இதுபோன்று பணத்தை மறைத்து வைத்து கடத்துகிறாரா என சோதனை செய்த போது, அந்த முதியவர் தனது கால் தொடையிலும் பணத்தை மறைத்து கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் முதியவரிடம் இருந்து ரூ.24¾ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் யார்? எங்கிருந்து கடத்தி வருகிறார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தானாஜி யஷ்வந்த் என்பதும், இவர் கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்கு கமிஷன் அடிப்படையில் இந்த பணத்தை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    மேலும் எர்ணாகுளத்தில் தனது அடையாளத்தை வைத்து மற்றொரு நபர் அந்த பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள், அவரை கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இவர் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டரா? அல்லது சமூக விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதியவர் ஒருவர் தனது உடல் முழுவதும் பணத்தை மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 16 வயது சிறுமிக்கு, முதியவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தார்.

    மாமல்லபுரம்:

    மதுராந்தகத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது67). பிரபல தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை சேர்த்து விடும் ஏஜெண்டாக இருந்தார். இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் நர்சிங் அகாடமி ஒன்றில் பெண்களை சேர்த்து விட வந்தபோது அங்கிருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தார்.

    ×